மாமல்லபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் மற்றும் இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை  காண சுற்றுலா பயணிகள் ஆர்வமாக மாமல்லபுரத்திற்கு வருவார்கள். கடல் நீரோட்டத்தில் பொதுவாகவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை விசை மாற்றம் வருமாம். அந்த வகையில் தற்போது விசை மாற்றம் ஏற்பட்டு கடல் நீர்மட்டம் சற்று உள்வாங்கியதால் அங்குள்ளமகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை காண முடிகிறது. 

மாமல்லபுரத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை கடல் நீர்மட்ட்டம் உள்வாங்கும். அதன்படி தற்போது, 200 மீட்டர் அளவிற்கு மணற்பரப்பு வெளிப்பட்டுள்ளது. மேலும் கடல் நீரில் மூழ்கி இருந்த பல சிற்பங்கள் மணற்பரப்பில்  தெரிய வந்துள்ளது. இந்த சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, அதன் மீது ரசாயண கலவை பூசும் பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.

மேலும், மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை அருகில் சென்று காண சிறிய மேம்பாலம் அமைக்க உள்ளதாக  தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறிய மேம்பாலம் கட்டினால், ஆறு மாத காலத்திற்கு  இந்த அற்புத சிற்பத்தை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை காண சுற்றுலா  பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.