Asianet News TamilAsianet News Tamil

மதுரை - தேனி ரயில் சேவை தொடக்கம்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் ரயில் சேவை..

மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 12 ஆண்டுகளுக்கு பிறகு புதிய அகல ரயில் பாதையில் முதல் ரயில் சேவை இன்று தொடங்கியது.

Madurai to Theni train first service after 12 years
Author
Tamilnádu, First Published May 27, 2022, 12:33 PM IST

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த மீட்டர் கேஜ் இரயில் பாதை , அகல ரயில் பாதையாக மாற்றப்படும் பணி முடிவுற்றது. இதனையடுத்து புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி  வாயிலாக துவக்கி வைத்தார்.

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 75 கி.மீ தூரமுள்ள இந்த புதிய அகல ரயில் பாதையில் மூன்று , சாலை மேம்பாலங்கள், ஐந்து பெரிய பாலங்கள், 161 சிறிய பாலங்கள், 32 சுரங்க பாதைகள், 17 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடந்து இன்று காலை மதுரை சந்திப்பில் இருந்து பயணிகளுடன் மதுரை - தேனி ரயில் தனது முதல் பயணத்தை துவக்கியது.

மதுரை - போடிநாயக்கனூர் அகல் ரயில் பாதை திட்டத்தில் முதற்கட்டமாக மதுரை - தேனி இடையேயான புதிய அகல் ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த திட்டத்திற்கு ரூ.445.46 கோடி செலவிடப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை - தேனிக்கு இடையே ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள்,விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு இந்த ரயில் சேவை மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதேபோல் இந்த மார்க்கத்தில் கூடுதல் ரயில் இயக்கப்படும் வேண்டும் என்றும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் சேவை தொடந்தால் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: Ration Shop: ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!

Follow Us:
Download App:
  • android
  • ios