அசத்திய மதுரை அரசு பள்ளி மாணவிகள்..! இஸ்ரோ ராக்கெட்டிற்கான சிப்பை தயாரித்து வெற்றி...நேரில் பாராட்டிய அமைச்சர்
இஸ்ரோ ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா திட்டத்தில் SSLVக்கான சிப்பை உருவாக்கியதற்காக தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பாராட்டு தெரிவித்தனர்.
சாதித்த மதுரை மாணவிகள்
இந்தியாவின் அறிவியல் சார்ந்த வளர்ச்சி மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளது. நாசாவிற்கு சவால் விடும் வகையில் இஸ்ரோவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இஸ்ரோ அமைப்பின் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் SSLV ராக்கெட்டுகளை ஏவுவதற்கான சிப்பை உருவாக்குவதற்காக 75 பார்டுகளாக பிரித்து அதற்கான 75 சிப்பை உருவாக்க இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் பள்ளி மாணவிகளை தேர்வு செய்துள்ளனர்.இதனையடுத்து SSLV ராக்கெட்டிற்கான சிப்பை உருவாக்குவதற்கான ஸ்பேஸ் கிட் வழங்கப்பட்டு கூகுள் மீட் மூலமாக மாணவிகளுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் ஆராய்ச்சியாளர்கள் மூலம் 5 மாத பயிற்சிகள் வழங்கினர். இதனையடுத்து கடந்தவாரம் ராக்கெட்டில் பயன்படுத்துவதற்கான சிப்பை உருவாக்கியவர்களின் சிப் செயல்பாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்ட தேர்வு குழுவினர் இந்தியா முழுவதிலும் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணாக்கர்கள் தேர்வு செய்தனர்.
இஸ்ரோ செல்லும் மாணவிகள்
இதில் தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு அரசு பள்ளியாக மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் 10பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஆடினோ ஐடி சாப்ட்வேரில் புரோகிராம் உருவாக்கி அதனை சிப்பில் பதிவேற்றியுள்ளனர். இதனை இஸ்ரோவிற்கு அனுப்பிவைத்த நிலையில் வரும் 7ஆம் தேதி காலை 9.15மணிக்கு இஸ்ரோவில் இருந்து ஏவப்படும் SSLV ராக்கெட்டில் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளின் சிப்பும் பொறுத்தப்பட்டு ஏவப்படவுள்ளது.அப்போது இஸ்ரோ ஏவுதளத்திற்கு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளான 10பேரும் அழைத்துசெல்லப்பட்டு நேரில் பார்வையிடுவர். அப்போது பிரதமரை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரோவால் தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் பயிலும் திருமங்கலம் அரசு பள்ளிக்கு நேரில் சென்ற பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு குட் நியூஸ்...! குறைந்த வாடகையில் டிராக்டர்கள்... அசத்திய தமிழக முதலமைச்சர்
அமைச்சர்,அதிகாரிகள் பாராட்டு
இதனை தொடர்ந்து மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அரசு பள்ளி மாணவிகளின் விஞ்ஞான அறிவை ஊக்குவிக்கும் வகையிலான இது போன்ற திட்டத்தில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரதமரை நேரில் சந்திப்பதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், முதல்வரையும் சந்திக்கவுள்ளதை நினைத்தாலே பெருமையாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. நாளை இந்த பகுதிகளில் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!