மதுரை பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்..சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு..கடையை இழுத்து மூடிய அதிகாரிகள்
மதுரையில் மிகவும் பிரபலமான மதுரை பன் பரோட்டா கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்திய அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
மதுரை மாநகரில் சாத்தமங்கலம் ஆவின் சந்திப்பில் அமைந்துள்ளது மதுரை பன் புரோட்டோ கடை. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இக்கடை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனிடயே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பெட்டிக்கடை வைப்பதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு, சாலையை ஆக்கிரமித்து பெரிய உணவகமாக கட்டியுள்ளதாக, விளக்கம் அளிக்குமாறு நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மற்றொரு சர்ச்சையில் பன் புரோட்டோ கடை சிக்கியுள்ளது.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகள் சென்றுவரக்கூடிய போக்குவரத்து சந்திப்பு அருகே இந்த கடை அமைந்துள்ளதால் ஏராளமானோர் நாள்தோறும் இங்கு வந்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் தான், இங்கு வாடிக்கையாளருக்கு சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க:தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. துத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா..
இதனையடுத்து மதுரை மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரபல மதுரை பன் புரோட்டோ கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பரோட்டா உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவை விற்பனை செய்ததாக கடைக்கு சீல் வைத்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையை மீறி விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மிகவும் பிரபலமான பன் புரோட்டா கடையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்காணோர் உண்டு வந்த நிலையில் அங்கு தயாரிக்கப்பட்ட புரோட்டோ உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கூறி உணவுபாதுகாப்புத்துறை சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:திடீர் சூறாவளி காற்று.. 14 அடிக்கு பொங்கி எழுந்த ராட்சத அலை.. கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..