Asianet News TamilAsianet News Tamil

Jallikattu:நிறைவுற்ற ஜல்லிக்கட்டு.. 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிதூக்கிய அவனியாபுரம் மண்ணின் மைந்தன்..

பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் 24 காளைகளை அடக்கி முதல் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது. 
 

Madurai Avaniyapuram jallikattu
Author
Madurai, First Published Jan 14, 2022, 5:59 PM IST

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெற்றது. இந்தப் போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர்  கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி 150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்பட்டனர்.பொதுவாக ஒரு சுற்றுக்கு 75 முதல் 100 வீரர்கள் அனுமதிக்கப்படுவர். 

Madurai Avaniyapuram jallikattu

ஆனால் இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளால் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்தப் போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Madurai Avaniyapuram jallikattu

மொத்தம் 7 சுற்றுகளாக ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. நடந்து முடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டில் மொத்தம் 624 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.  இந்நிலையில் பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.  வலையங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி 2வது இடத்தை பிடித்தார் . இவருக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை அடக்கி மூன்றாவது இடம் பிடித்த பரத்குமாருக்கு பசு, கன்று பரிசாக வழங்கப்பட்டது. 

Madurai Avaniyapuram jallikattu

அதே போல் சிறந்த காளைக்கான விருது மணப்பாறை சேர்ந்த தேவ சகாயத்திற்கு திருவல்லிக்கேணி- சேப்பாகம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பாக இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான இரண்டாம் இடத்தை பிடித்த மாட்டின் உரிமையாளருக்கு பசு, கன்று பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பிடித்தவருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios