மதுரை அழகர் கோவிலில் தீ விபத்து.! புரட்டாசி சனிக்கிழமையில் துயர சம்பவம் - பரபரப்பு சம்பவம் !

மதுரை கள்ளழகர் கோயிலில் இன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுவாமி படங்கள் எரிந்து தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Madurai Alagar temple Fire accident in Tragedy on Puratasi Saturday

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டும்,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். 

இந்நிலையில் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளியின் அருகேயுள்ள அறைகளில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனையடுத்து அருகில் உள்ள பக்தர்கள் அவசரவசரமாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தும் சிறிது நேரம் தாமதமான நிலையில் அடுத்தடுத்த அறைகளுக்கு தீப்பரவ தொடங்கியது.

Madurai Alagar temple Fire accident in Tragedy on Puratasi Saturday

இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மதுரைஅப்பன் திருப்பதி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மதுரை மற்றும் மேலூரிலிருந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது. இந்த தீவிபத்தில் பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும் அந்த அறையில் இருந்த சுவாமியின் படங்கள் அனைத்தும் எரிந்து தீக்கிரையானது. புரட்டாசி சனிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்தது பக்தர்கள் மனதில் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Madurai Alagar temple Fire accident in Tragedy on Puratasi Saturday

இதையும் படிங்க..கேரளா மூத்த சிபிஎம் தலைவர் மறைவு - யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன் ?

இதுதொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கு மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு , விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios