செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு தள்ளி வைப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Madras High Court reserves orders on a bail plea filed by Senthil balaji smp

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சாதாரண ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. எனவே, ஜாமீன் கிடைக்க அமைச்சர் பதவி இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கரூரில் அண்ணாமலை நடைப்பயணத்துக்கு கருப்பு கொடி: 11 பேர் கைது!

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை வழக்கறிஞர் சுந்தரேசன் ஆகியோர் தங்களது வாதத்தை நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பதில் வாதம் செய்ய வழக்கின் விசாரணை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios