பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பாணை வெளியிட்டது. 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ராம் நூற்பாலை மில் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார் பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும், அந்த திட்டத்துக் கான நூல் கொள்முதல் டெண்ட ரில், மாசு கட்டுப்பாடு வாரியத் திடம் இருந்து ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ சான்றிதழ் பெற்ற நூற்பு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க வேண் டும் என நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிபந்தனையால் அகில இந்திய அளவில் நடக்கும் டெண் டரில் ஜீரோ - டிஸ்சார்ஜ் பெறாத மற்ற நூற்பு நிறுவனங்களால் பங்கேற்க முடியாது எனவும், எங்களது நிறுவனம் சாயமேற்றுவதற்காக மும்பையில் உள்ள நூற்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், அகில இந்திய அளவில் ஜீரோ - டிஸ்சார்ஜ் யூனிட் சான்றிதழ் கொண்ட சாயக் கழிவு ஆலைகள் மற்றும் நூற்பு ஆலைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. எனவே, இந்த ஒரு நிபந்தனையின் மூலம் இலவச வேட்டி, சேலை டெண்டரில் பெரும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

இலவச வேட்டி, சேலை திட்டத்துக் கான நூல் கொள்முதலுக்கான டெண்டரை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. 

இந்த மனு, நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதல் டெண்டரை இறுதி செய்ய தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். 

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்து  உத்தரவிட்டது.