madhurai court warning to nithyanandhaa gang
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்து வரும் மதுரை உயர்நீதிமன்ற கிளை, நித்யானந்தா தரப்புக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையை சேர்ந்த ஜெகதல பிரதாபன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆதீனமாக ஒருவரை நியமித்த பிறகு, அவர் தான் நிரந்தரமாக தொடருவார் என நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது, 292வது ஆதீனம் உயிருடன் இருக்கும் போது, 293வது ஆதீனம் என நித்யானந்தா கூறுவது எப்படி? நீதிமன்றத்திற்கு தவறான தகவல் தந்ததற்காக நித்யானந்தா மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு விசாரணை, அடுத்தமாதம் 13 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
