Asianet News TamilAsianet News Tamil

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா.. பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மரியாதை

வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை" வெளியிட தமிழக முதலமைச்சர் வெளியிட கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.

M K Stalin and Pinarayi Vijayan Tribute at Periyar Memorial KAK
Author
First Published Dec 28, 2023, 1:02 PM IST | Last Updated Dec 28, 2023, 1:02 PM IST

வைக்கம் நூற்றாண்டு விழா

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தைப் பெரியார் அவர்கள் வைக்கம் சென்று. அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். வரலாற்று சிறப்பிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றது.

M K Stalin and Pinarayi Vijayan Tribute at Periyar Memorial KAK

நூற்றாண்டு மலர் வெளியீடு

"வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டினையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 30.03.2023 அன்று விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். சமூகநீதி வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த வைக்கம் போராட்டத்தினை தந்தைப் பெரியார் அவர்கள் முன்னின்று நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எல்லைக் கடந்து போராடி வரலாற்றில் பல புரட்சிகளை நிகழ்த்தி காட்டி வெற்றி கண்ட அவரின் நினைவைப் போற்றவும், அன்னாரின் சமூகநீதிக் கருத்துக்களை பின்வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ளவும், 

M K Stalin and Pinarayi Vijayan Tribute at Periyar Memorial KAK

பெரியார் நினைவிடத்தில் மரியாதை

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகளை பல்வேறு அறிஞர் பெருமக்களிடம் இருந்து பெற்று அதனைத் தொகுத்து "வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்" என்ற சிறப்பு மலர் ஒன்றினை தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 'தமிழரசு' சார்பில் தயாரித்து வெளியிடப்படும் என்ற ஒரு அறிவிப்பும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில், "வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்" என்ற சிறப்பு மலரினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் பெற்றுக்கொண்டார். முன்னதாக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios