கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தேஸ்கோ என்ற தெய்வசிகாமணி இருந்து வருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அந்த பெண் தேஸ்கோவை என்பவரை கழற்றிவிட்டு வேறொருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட தேஸ்கோ அந்த பெண்ணை எச்சரித்துள்ளார். ஆனாலும் அந்த பெண் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
இதனால் ஆத்திரமடைந்த தேஸ்கோ அந்த பெண்ணை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதனையடுத்து தேஸ்கோ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார். ஆனால் கொலை முயற்சிக்கு பதில் வழிபறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவந்துள்ளது.