love affied muruder issue

திண்டுக்கல்லில் உள்ள தங்கும் விடுதியில் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து, தொழிலாளி ஒருவர் கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே, உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு, கடந்த 10ஆம் தேதி கணவன் - மனைவி என்று கூறி 2 பேர் அறை எடுத்து தங்கினர். இருவரும் மிகவும் சந்தோஷமாக வெளியில் சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

மாலை வெகு நேரமாகியும் அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் வாலிபர் பிணமாகக் கிடந்தார். இவருடன் தங்கி இருந்த பெண், குளியல் அறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். 

கள்ளக்காதல் பிரச்சனை:

போலிசாரின் விசாரணையில், தற்கொலை செய்துக்கொண்ட வாலிபர் பெயர் பிரசாந்த் (26 வயது) என்றும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவருடன் வந்திருந்த பெண்ணின் பெயர் பாலாம்பிக்கா (29 வயது) என்பதும் இவரும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடிகள் என்றும் தெரிய வந்துள்ளது.

விசாரணையில் வெளியான தகவல்:

இந்நிலையில் பிரசாந்த், கோவையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் பாலாம்பிகாவிற்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளார். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் பாலாம்பிகாவின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியை சேர்ந்த உறவுக்காரரான நட்ராஜ் என்பவருக்கு பாலாம்பிகாவை திருமணம் செய்து வைத்து விட்டனர். 

இருப்பினும் இவர்களுடைய காதல் தொடர்ந்துள்ளது. அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் பாலம்பிகாவின் கணவர் இவர்கள் இருவரையும் கண்டுதுள்ளார்.

வேறு ஆணுடன் தொடர்பு:

மேலும் பாலாம்பிகாவிக்கு, பிரசாந்த் தவிர வேறு ஒரு ஆணுடனும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இது பிரசாந்துக்கு தெரிய வந்ததும் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை முற்றியுள்ளது. 

இதனால் பாலம்பிகாவை தனியாக வெளியே வர சொல்லி அரை எடுத்து தங்கியுள்ளார். அப்போது இவர் மற்றொரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பது குறித்து பிரசாந்த் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது. ஒருநிலையில் ஆத்திரம் தலைகேறிய பிரஷாந்த் பாலாம்பிகாவை கழுத்தை அறுதி கொலை செய்து விட்டு. தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார் என போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.