lorry strick

லாரிகளுக்கான இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதையடுத்து சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டுதால்.10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து உள்ளன.



லாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘சரக்கு புக்கிங்’ நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5,643 லாரி புக்கிங் ஏஜெண்டு நிறுவனங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

‘சரக்கு புக்கிங்’ நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதன் மூலம் லாரி டிரைவர்கள், கிளனர்கள், சுமை தூக்குபவர்கள் என ஏராளமான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.