திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய தாய், மகளை போட்டுத் தள்ளிய லாரி டிரைவர்…. தூக்கிட்டு தற்கொலை…

திருவண்ணாமலை அருகே மகளை திருமணம் செய்து தருவதாக கூறி பின்னர் ஏமாற்றிய தாய், மகள், தந்தை  ஆகியோரை கத்தியல் குத்திவிட்டு லாரி டிரைவர் ஒருவர் தற்கொலை செய்து கெண்டார், இந்த சம்பவத்தில் தாயும், மகளும் உயிரிழந்தனர். தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், நிர்மலா என்ற மகளும் உள்ளனர்..

நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் படித்து  வந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்என்பவர் கடந்த பல  ஆண்டுகளுக்கு மேலாக நிர்மலாவை காதலித்து வந்துள்ளார். இவர்  சென்னையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

மேலும் நிர்மலாவை திருமணம் செய்து தருவதாக, அவரது பெற்றோர் கூறியதன் பேரில் நிர்மலாவின் படிப்புக்கும் சுப்பிரமணியன் உதவி செய்து வந்துள்ளார். சுப்பிரமணியன் சென்னையில் இருந்து சில நாட்களுக்கு  முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியன் நிர்மலாவின் வீட்டிற்கு சென்று, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அப்போது சிவராமனும், சாமுண்டீஸ்வரியும் பெண் தரமாட்டேன் என்று கூறி, சுப்பிரமணியனிடம் தகராறு செய்து உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் அன்று இரவு சிவராமன் வீட்டுக்கு சென்றார். அங்கு வெளியே படுத்திருந்த சிவராமனையும், தாழ்வாரத்தில் படுத்திருந்த சாமுண்டீஸ்வரியையும் கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் வீட்டிற்குள் சென்ற அவர், அறையில் தூங்கிக் கொண்டிருந்த  நிர்மலாவை துணியால் கழுத்தை நெரித்துள்ளார்.

இதில் நிர்மலாவும், சாமுண்டீஸ்வரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதைதொடர்ந்து சுப்பிரமணியன் அதே வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அவ்வழியே சென்ற சிலர் வெளியே சிவராமன் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து அவர்கள் சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சிவராமனை மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த வீடு தனியாக இருந்ததால் இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் போனதாக போலீசார் தெரிவித்தனர்.