Lorry - bus accident - 5 killed
திருநெல்வேலியில், நின்றிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியில் இருந்து 22 பேர் கொண்ட ஆம்னி பேருந்து ஒன்று திருநெல்லைக்கு வந்தது. நெல்லையில் உள்ள கோயில்களுக்கு செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், திருநெல்வேலி, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தம் அருகே ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்தது. ஆம்பி பேருந்தில் இருந்து 5 பேர் இறங்கியுள்ளனர்.
அப்போது திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுயாகமடைந்த குமார், சத்யம்மாள், பிரசன்னா, அனுஷ்கா, சூரிய நாயணன், சாவித்ரி, ரேணுகா தேவி ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அங்கு வந்த போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்படுள்ளது.
