Asianet News TamilAsianet News Tamil

Loksabha Election : காமராஜர் பெயரில் உணவு வங்கி முதல்.. நவோதயா பள்ளிகள் வரை - பாஜகவின் தேர்தல் அறிக்கை இதோ!

BJP Election Manifesto : வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Loksabha election 2024 bjp leader annamalai released the election manifesto ans
Author
First Published Apr 12, 2024, 4:15 PM IST

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேர்தல் அறிக்கையை வாசித்தார்... அவர் பின்வருமாறு...
 
கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் துவங்கப்பட்டு, அது மக்கள் குறை தீர்க்கும் மன்றமாக செயல்படும். கோவை விமான நிலையத்தை உலக தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும். கோவை மெட்ரோ திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும். 

தமிழகத்தில் இரண்டாவது இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், கோவையிலே நிறுவுவதற்கான எல்லாம் முயற்சிகளையும் எடுப்போம். விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை, நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம். மையல் நதி மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகளை மீட்டெடுத்து, கோவையினுடைய நீர் வளத்தை மேம்படுத்துவோம். 

விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வண்ணம், பவர் டெக்ஸ் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். அதன் கீழ் சூரிய மின் தகடுகள் அமைக்க மற்றும் சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத விசைத்தறிகளாக மாற்றி வழங்கப்படும். மானிய தொகையை உயர்த்தி வழங்குவோம். கோவையிலே போதை பொருள் தடுப்பு மையத்தை நிறுவுவோம். 

காங்கிரஸ் ஆட்சி வந்தால் மேகதாது அணை! சித்தராமையா சொல்லி 3 நாள் ஆச்சு! கண்டனம் தெரிவிக்காத முதல்வர்! அன்புமணி!

கோவை மத்திய அரசினுடைய நான்கு நவோதயா பள்ளிகளை அமைத்து, நமது குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்வோம். கோவையில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையம் பட்டியாலா ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி இந்தியா பட்டியாலா அதனுடைய கிளை பயிற்சி மையம் கோவையில் அமைப்பதற்கு பாடுபடுவோம். 

250 மோடி ஐயா அவர்களுடைய மக்கள் மருந்தகங்களை கோவையில் நிறுவுவோம். வயோதிகர்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிறப்பு மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய கோவையில் உலகத்தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மீக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்க ஆவணம் செய்வோம். 

சபரிமலை யாத்திரை ஒருங்கிணைக்க கோயம்புத்தூரில் உதவி மையத்தை அமைப்போம். கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் உதவியோடு உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நிறுவுவோம். ஆயுஷ் மான் பாரதத்திட்ட பயனாளிகளுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்போம். 

கர்மவீரர் காமராஜர் அவர்கள் நினைவாக அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் Food Bank அமைப்போம். அதாவது எந்த நேரமும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் உணவு கொடுப்பதற்காக உருவாக்கப்படும் ஒரு விஷயம் அது. கடந்த 10 ஆண்டுகளில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசு வழங்கிய அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்துவோம். 

இந்த தணிக்கையில் கண்டறியப்படும் முறைகேடுகளின் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாஜக முயற்சிகளை மேற்கொள்ளும், என்று தங்கள் வாக்குறுதிகளை பாஜக சார்பாக அதன் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

MP.. MLA என எந்த பதவியும் இல்லாத போதே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அண்ணாமலை.! பொறுப்பு கிடைத்தால்!சவுக்கு சங்கர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios