Asianet News TamilAsianet News Tamil

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.. பொருட்காட்சி நடத்த தடை..எதற்கெல்லாம் கட்டுப்பாடு.? முழு விபரம்..

பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கில் எதற்கெல்லாம் தடைகளும், கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.
 

Lockdown Extended Feb 10th
Author
Tamil Nadu, First Published Jan 27, 2022, 8:42 PM IST

கொரோனா பரவல் தடுப்பு புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத்துறை செயலாளர், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

ஆலோசனை கூட்ட முடிவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து கொரோனா ஊரடங்கை பிப்ரவரி 10 தேதி வரை நீட்டித்து  உத்தரவு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் எதெற்கெல்லாம் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .

1, சமுதாய, அரசியல், மற்றும் கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்விற்கு தடை தொடரும்

2,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

3,மழலையர் விளையாட்டு பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை

4,பொருட்காட்சி நடத்த அனுமதியில்லை

5,அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை..

6,உணவங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 % வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதி

7,திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேர் மட்டுமே அனுமதி

8,இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டும் அனுமதி

9,துணி மற்றும் நகைகடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி

10,கேளிக்கை விடுதிகள் உள்ள உடற்பயிற்சி கூடங்கள்,விளையாட்டுக்கள்,உணவகங்கள், யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள்  ஒரே நேரத்தில் 50 % பேருடன் இயங்க அனுமதி

11,அனைத்து திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

12,உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் 50% பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி

13,அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள்,இசை மற்றும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி

14,அழகு நிலையங்கள், சலூன்கள்,அனைத்து பொழுதுப்போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

Follow Us:
Download App:
  • android
  • ios