தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்கப்படாமல் தேர்தலை அறிவித்துள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன், தேர்தலை ரத்து செய்து தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மேற்கண்ட முறைகளை கலைந்து டிச 30க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.
தனி நீதிபதி உத்தரவு என்பதாலும் ரூ.106 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.

இதை தொடர்ந்து கடந்த மாதம் 7ம் தேதி தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் பி.குமார் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
அதன் பேரில் இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் , பார்த்திபன் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பின்னர், இந்த வழக்கை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றை தினம் விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக, திமுக தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவை, தங்கள் தரப்பில் முழுவதுமாகபடித்து பார்த்து பதில் அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரினார்.
அதேபோல், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் எந்தெந்த இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் வழக்கப்படவில்லை என்பது குறித்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பரிசீலித்து பதிலளிக்க கால அவகாசம் கேட்டனர்.
இதைதொடர்ந்து நீதிபதிகள், இரு தரப்பினருக்கும் கால அவகாசம் குறித்து கேட்டறிந்து, 3 வார காலத்துக்கு தேதி குறிப்பிடாமல், வழக்கை ஒத்த வைத்தனர்.
ஏற்கனவே தனி நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை அப்படியே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
