TASMAC : தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி !!

2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இனி பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Liquors rates increased in tasmac outlets in Nilgiri tamilnadu govt order

தமிழக அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மது விற்பனை மூலமே கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. குவாட்டருக்கு ரூ.10, புல்லுக்கு ரூ.40 விலை உயர்ந்தது. அதேபோல 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்பட்டது. 

Liquors rates increased in tasmac outlets in Nilgiri tamilnadu govt order

இந்நிலையில் இனி பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில்,சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி விட்டு காலி மதுப்பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்,குறிப்பாக வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுவதாவும் புகார் எழுந்த நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது,மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள்,கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது. மீறினால்,மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

Liquors rates increased in tasmac outlets in Nilgiri tamilnadu govt order

இந்நிலையில்,நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனி விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுப்பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்க டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும்,காலி மதுப்பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் திரும்ப கொடுத்து விட்டு கூடுதல் கட்டணமான ரூ.10-ஐ திரும்ப பெறுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த செய்தி மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios