Asianet News TamilAsianet News Tamil

TASMAC : நேற்று ஒரே நாளில்... இவ்வளவு கோடிக்கு 'மது' விற்பனையா..? அசால்ட்டாக சாதனை செய்த மதுப்பிரியர்கள் !!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு, புத்தாண்டு சாதனையை முறியடித்து இருக்கிறது. 

Liquor sales for Rs 217 crore across Tamil Nadu in a single day yesterday
Author
Tamilnadu, First Published Jan 9, 2022, 12:06 PM IST

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

Liquor sales for Rs 217 crore across Tamil Nadu in a single day yesterday

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி,  இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில்,டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால்,டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை நீண்ட வரிசையில் நின்று, நேற்றே மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக,சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கும்,திருச்சியில் ரூ.42.50 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Liquor sales for Rs 217 crore across Tamil Nadu in a single day yesterday

மேலும்,கோவையில் ரூ.41.28 கோடிக்கும்,சேலத்தில் ரூ.40.85 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புத்தாண்டு விற்பனையை விட  அதிகமாகும். புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் 147 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. தற்போது அதனைவிட 70 கோடி ரூபாய்க்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios