Liquor income decreased

2016-17 ஆம் ஆண்டைவிட 2017-18 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.201 கோடி குறைந்ததாக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளின்போது, தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக கூறி திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் கூட்டத்தொடரை முழுவதும் புறக்கணிக்கப்போவதாகவும் திமுக அறிவித்தது.

இந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் சட்டப்பேரவைக் கூடியது. அப்போது, டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டைவிட குறைவானதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டைவிட 2017-18 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமான குறைந்ததாக கூறப்பட்டது. 

2016-17 ஆம் ஆண்டில் ரு.26,995.25 கோடியாக இருந்ததாகவும், ஆனால், 2017-18 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.26,794 கோடியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்து ஆண்டு ரூ.201 கோடி டாஸ்மாக் வருமானம் குறைந்ததாக அரசு தெரிவித்துள்ளது.