LIGHTENING IN THIRUVANNAMALAI AT 6 PM

வேத மந்திரங்கள் முழங்க திருவண்ணாமலையில் மகா தீபம் சரியாக மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைகோட்டை உள்ளிட்ட பல திருத்தலங்களில் தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் கோவிலில், தீபத்திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில் முக்கிய நிகழ்வான பரணி தீபம், ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.45 மணிக்கு வெகு விமர்சையாக நடந்தது.சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இன்று மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் சற்றமுன் ஏற்றப்பட்டது

அப்போது, பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் எனபதே ஐதீகம்....

திருவண்ணாமலையில் பல்லாயிரக்கணக்கானபக்தர்கள் தற்போது தீபத்தை பார்த்து தரிசனம் செய்தனர்