Let wait for 2 more days then its hard for you to hear

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழையினால் எதிர்பார்த்ததை விட இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் குறிப்பாக சென்னையில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை விடாமல் 3 நாட்கள் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போன்று தேங்கியுள்ளது.

சாலைகளில் கூட பெருமளவு தண்ணீர் தேங்கியுள்ளதால்,போக்குவரத்கு நெரிசல் ஏற்பட்டு உள்ளது.பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் தண்ணீர் வற்றாத பல இடங்களில், விஷ பூச்சிகள்,பாம்பு உள்ளிட்டவைகள் கண்முன் செல்வதை பார்க்க முடிகிறது.

இதனை தொடர்ந்து மழை சற்று குறையுமா என எதிர்பார்த்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்,அடுத்து 3 நாட்களுக்குள் மழை படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளார்

கடந்த 24 மணி நேரத்தில், நாகை தலைஞாயிரில் 27 செ.மீ திருப்பூண்டியில் 24 வேதாரண்யத்தில் 16 செமீ மழை பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளார்

எனவே வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் பள்ளிகள் இயங்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மக்களின் இயல்பு வாழ்கையும் திரும்பும் என கூறப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை குறித்த முக்கிய அறிவிப்பு… தி தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...

சென்னையில் இன்று இடைவெளிவிட்டு பல முறை மழை பெய்யும். ஆனால், அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது. இடைவெளியுடன் நகரின் பல இடங்களில் அவ்போது மட்டுமே மழை இருக்கும். 

சென்னையைப் பொருத்தவரை குறைந்தகாற்றழுத்த தாழ்வுபகுதி பாதிப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை, இம்மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் நகரில் மிக திகமான மழை இருக்கும், மிக கனமழையும் பெய்யக்கூடும். 

தென் தமிழகம், தமிழகத்தின் மேற்கு உள்மாவட்டங்களில் இந்த வடகிழக்கு பருவமழையில் முதல் முறையாக மழை இருக்கும். 

தமிழகத்தின் தென், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு. உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சிவகிரி ஆகிய பகுதிகளில் மழை இருக்கும். இலங்கைக்கு அருகே இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால், இன்று மழை இருக்கும். 

கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தின் உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலையிலும் கூட இன்று மழை இருக்கும்.