வழக்கறிஞர்களுக்கான சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்துப் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.

“வழக்கறிஞர்களுக்கான சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்,

சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்,

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலி பணியிடங்களில் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் மூத்த வழக்குரைஞர்களுக்கான முன்னுரிமை வழங்கிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று தங்களது நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்புப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்தப் போராட்டம் இரண்டாவது நாளான நேற்றும் தொடர்ந்தது.

இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்.