விடுமுறை கால நீதிமன்றத்தின் விசாரணையின் போது வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை என வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

விடுமுறை கால நீதிமன்றத்தின் விசாரணையின் போது வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை என வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஜூன் 5 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை கால நீதிமன்றம் 10 நாட்கள் இயங்குகிறது. ஆண்டுதோறும், உயர் நீதிமன்றத்துக்கு மே மாத கோடை விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி, மே மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் வழக்கம் போல இயங்கும். விடுமுறை காலத்தில், மே முதல் வாரம் மட்டும் திங்கள், புதன்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

மே மாதத்தின் பிற வாரங்களில், திங்கள், செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் புதன், வியாழன் அன்று விசாரணைக்கு எடுக்கப்படும். விடுமுறை கால நீதிமன்றத்தில், 20 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கின்றனர். மதுரை கிளையில், 15 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கின்றனர். இதனிடையே விடுமுறை கால நீதிமன்றத்தின் விசாரணையின் போது வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை என வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஜூன். 5 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆனால் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்தில் இரண்டு நாள் நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக தனி நீதிபதிகளையும் பதிவாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரை கிளை கூடுதல் பதிவாளர் பூரண ஜெய ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 5 வழக்கறிஞர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று தலைமை நீதிபதி அறிவுரைபடி கோடைகால விடுமுறை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கற நீதிமன்றங்களில் அங்கி அணிய தேவையில்லை. அதே நேரத்தில் அவர்கள் கருப்பு கோட்டுடன் கூடிய கழுத்து பட்டை கட்டாயம் அணிந்து ஆஜராகி கொள்ளலாம் என்ற கூடுதல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.