லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஷ்ரம் பள்ளியில் பணியாற்றும் தோட்ட தொழிலாளி மரத்தில் இருந்து விழுந்து பலியானார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி காந்த் ஆஷ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார். சென்னை வேளச்சேரி சாலையில் ஒரு பள்ளியும், மேற்கு சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியிலும் ஆஷ்ரம் மேல் நிலைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.

இந்த பள்ளியில் தோட்ட பராமரிப்பு பணியாளராக ஆளுமுகம் (48) என்பவர் இருந்து வந்தார். இவர் மதுராந்தகம், பிள்ளையார் பட்டியைச் சேர்ந்தவர். கடந்த 5 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், ஆஷ்ரம் மேட்லநிலைப் பள்ளியில் உள்ள மரத்தில் ஏறி மரக்கிளையை வெட்டிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, ஆறுமுகம் மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் ஆறுமுகத்தின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

ஆறுமுகத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.