Last year we saw 14 tigers and this year we saw only 7 tigers - officials
நீலகிரி
முதுமலையில் புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பின்போது போன வருடம் 14 புலிகளை நேரில் பார்த்தோம். ஆனால், இந்த வருடம் வெறும் 7 புலிகளை தான் பார்க்க முடிந்தது என்று கணக்கெடுப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகத்தில் தற்போது 60-க்கும் மேற்பட்ட புலிகள் இருக்கிறது என்று கணக்கெடுக்கபட்டு உள்ளதாக சொல்லிகிறாங்க.
தமிழகத்திலேயே அதிக புலிகள் வாழும் இந்த காப்பகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறையானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கபடுகிறது. கணக்கெடுப்பின் போது புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றிற்கு தேவையான உணவு உள்ளதா? இருப்பிட வசதி உள்ளதா? என்பது போன்றவைகள் கண்காணிக்கபடுகிறது.
இந்த ஆண்டிற்கான முதல் கணக்கெடுப்பு கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இதில் மசினகுடி, தெப்பகாடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை என ஐந்து வனச்சரகங்களில் உள்ள புலிகள் கணக்கெடுக்கும் பணியில் 35 குழுக்கள் ஈடுபட்டன.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனத்துறை ஊழியர், ஒரு வேட்டைத் தடுப்புக் காவலர், ஒரு தன்னார்வலர் என மூன்று பேர் இடம் பெற்றிருந்தனர்.
இது குறித்து அதிகாரிகள், “கணக்கெடுப்பு குழுவினர் கடந்த ஆறு நாள்களாக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகளில் தங்கி இருந்து நேரடி கணக்கெடுப்பு, மறைமுக கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
குழுக்களில் சிலர் புலிகளின் கால்தடம், எச்சம் போன்றவைகளை வைத்து கணக்கெடுத்தல், நீர் நிலைகளில் சென்று கணக்கெடுத்தல் போன்ற பல்வேறு முறைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் போது 14 புலிகளை நேரடியாக பார்க்க முடிந்தது. ஆனால் இந்த முறை வெறும் 7 புலிகள் மட்டுமே காண முடிந்தது.
இந்த கணக்கெடுப்பின்போது அனைத்து குழுவினரும் சேகரித்த தகவல்கள் சேகரிக்கபட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்படும்.
மூன்று மாதங்களுக்கு பிறகு கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் மற்றும் புலிகளின் எண்ணிக்கை தெரிய வரும்” என்று அவர்கள் கூறினர்.
