கணவர் விஜய் வீட்டில் இல்லாத போது தனது கள்ளக் காதலன் சுந்தரத்துடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த அபிராமி. கடந்த வாரம்  வீட்டை விட்டு வெளியேறி ,  சுந்தரம் வீட்டில் போய் தங்கி உள்ளார். 

சென்னை  குன்றத்தூர் மூன்றாம் கட்டளை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். விஜய் வீட்டில் இருக்கும் நேரம் மட்டும் வீட்டில் இருக்கும் அபிராமி, விஜய் வேலைக்கு சென்றவுடன், நண்பர்கள் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறி விட்டு, எங்காவது ஊர் சுற்றச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  எப்போதுமே மேக்கப் போட்டுக் கொள்வதில் ஆர்வம் கொண்ட அபிராமி எப்போதுமே மேக்கப் போட்டுக்கொண்டு தோழிகளை பார்க்க செல்வதாக தனது ஸ்கூட்டியில் ஜாலியாக ஊர் சுற்றுவாராம்.  

அதேபோல, பிரியாணியை விரும்பி சாப்பிடும் அபிராமி, அதனை குன்றத்தூரில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து அடிக்கடி ஆர்டர் செய்து, தனது வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுவது வழக்கம். இவ்வாறு அடிக்கடி பிரியாணி கொண்டு வந்த பிரியாணி கடையின் ஊழியர்  குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

கணவர் விஜய் வீட்டில் இல்லாத போது தனது கள்ளக் காதலன் சுந்தரத்துடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் அபிராமி.  இந்த பழக்கம் சுந்தரத்தின் வீட்டிற்க்கே சென்று உல்லாச வாழ்க்கை வாழும் அளவிற்கு மாறியுள்ளது. தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய்  கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி  பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். இந்த நிலையில், விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குன்றத்தூர் போலீசாரின் விசாரணையில்,  ‘’பாலில் விஷம் கலந்து கொடுத்த பின்னர் குழந்தைகள் உயிர் தப்பிவிடுவார்கள் என நினைத்து அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றேன்.  கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன்.   நேற்று முன்தினம் அவர் வராததால், அவர்  தப்பித்துவிட்டார் என  பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அபிராமி இப்படி செய்ததற்கு காரணம், கணவன் அடிக்கடி கண்டிப்பதால் ஆத்திரமடைந்த அபிராமி, அவரை பழிவாங்க நினைத்தார்.  கடந்த வாரமே கணவர் வேலைக்கு சென்றதும் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தனது கள்ளக் காதலனின் வீட்டிற்க்கே சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு நாள் முழுவதும் வராததால், இந்த விஷயம் அறிந்த கணவர் கள்ளக் காதலனின் வீட்டிற்க்கே சென்று மனைவியிடம் கெஞ்சி கூப்பிட்டு வந்திருக்கிறார்.