Larry driver committed suicide by burning fire
கரூர்
கரூரில், குடியை மறக்க முடியாமல் லாரி ஓட்டுநர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம், காணியாளம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (45). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. சமீப காலங்களாக சாராய போதைக்கு அடிமையாகி வேலைக்கே கூட செல்லாமல் குடித்துக் கொண்டே இருந்தாராம்.
இதுதொடர்பாக அவரது மனைவி பலமுறை திட்டியும். குடிப்பதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்ததால் மனைவி மீண்டும் திட்டியுள்ளார். இதனால், வாழ்வில் விரக்தி அடைந்த அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
