’சரக்கெடுத்து காட்டுடீ!வாவ்வ்... ஏட்டம்மாவின் லீலைகள்! ஏட்டம்மா ஒரு ஃபுல் அடிச்சுட்டு உட்கார்ந்திருக்குறா, செம்ம போத! நல்லா பார்த்துக்குங்க. காட்டு டீ, காட்டு’ 
-    இப்படியான வர்ணனையுடன் நகரும் அந்த வீடியோதான் இன்று தமிழக போலீஸுக்கு காட்டு காட்டென்று காட்டிக் கொண்டிருக்கிறது மானக்கேடினை!

வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை பார் உடன் சேர்த்து ஓப்பன் செய்து வைத்து ‘வாடா வந்து குடிடா’ என்று நல்ல வாயில் சரக்கை ஊற்றி நாறவாய் ஆக்குகிறது அரசாங்கம். பாக்கெட் மணியில் முக்கால்வாசியை அங்கு அழுதுவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினால் தெரு முனையிலேயே செக்கிங் செய்கிறது போலீஸ். அதே வாயை ஊத சொல்லி பைன் போட்டு மீதி பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அனுப்புகிறது. தமிழ்நாட்டில் குடி நிலைமையும், குடிகாரன் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.

இது ஒருபக்கம் கிடக்கும் நிலையில் வாட்ஸ் அப் வீடியோ ஒன்று வைரலாக துவங்கியுள்ளது. அதில் லேடி போலீஸ் ஏட்டு ஒருவர், யூனிஃபார்மில் கார் சீட்டில் சாய்ந்து படுத்திருக்கிறார். அவரை மொபைல் கேமெரா ஒன்று டார்ச் லைட் வெளிச்சத்தில் வீடியோ எடுக்கிறது. வீடியோ எடுக்கும் நபர் ஆண்! அநேகமாக சக காவலராக இருக்கலாம். சாய்ந்து கிடக்கும் லேடி போலீஸ் சின்ன வெட்கத்துடன் எழுந்திருக்கும் நிலையில் வீடியோ எடுக்கும் நபர் பேச துவங்குகிறார். கேட்கவே நாராசமாக இருக்கும் அந்த பேச்சு இப்படி விரிகிறது....

“சரக்கெடுத்து காட்டுடீ! ஏட்டம்மாவின் லீலைகள். ஏட்டம்மா போதையாயிட்டா, நல்லா பார்த்துக்குங்க. ஃபுல் அடிச்சுட்டா! காட்டு டீ, கண்ணை காட்டுடீ” என்றதும் மப்பு கலந்த வெட்கத்துடன் கண்ணை கேமராவுக்கு கண்ணை காட்டுகிறார் லேடி ஏட்டு. இந்த வர்ணனை நடக்கும் போதே ஏட்டம்மாவின் முகத்துக்கு கீழே, யூனிஃபார்மினால் மறைக்கப்பட்ட பர்ஷனல் உறுப்புகளை நின்று, நிதானமாக ஃபோகஸ் செய்கிறது கேமெரா. ஆனால் அதையெல்லாம் அறிந்து தடுக்கவோ, தட்டிவிட்டு  கோபப்படும் நிலையிலோ ஏட்டம்மா இல்லை. 

அடுத்து கேமெராவின் வெளிச்சத்தில் டம்ப்ளரில் மீதமிருக்கும் சரக்கில் கொஞ்சம் குடிக்கும் ஏட்டம்மா,  ‘நீ குடிடா! என்று வீடியோ எடுக்கும் நபருக்கு கொடுக்கிறார்.’ அவரோ, ‘இதை குடிச்சா என்ன? குடிக்காட்டி என்ன? நீயே முடிச்சுடு’ என்கிறார், ஆனால் விடாமல் அவரை குடிக்க சொல்கிறார் ஏட்டம்மா! பிறகு, கேமெரா அந்த வாகனத்துக்குள்ளேயே அங்குமிங்கும் அலைபாய்கிறது. பின் சைடு டிஸ்ஸான காராசேவை சாப்பிடுகிறார்கள். பிறகு மீண்டும் ஏட்டம்மாவை நோக்கி திரும்புகிறது கேமெரா. அப்போது ‘அய்ய போதையாயிடுச்சு’ என்றபடியே மீதமிருக்கும் சரக்கையும் குடித்து முடிக்கிறார் ஏட்டம்மா. அப்போது வீடியோ எடுக்கும் நபர், ‘ஸ்ஸ்ஸ்சரக்கடிக்கிறா! ஏட்டம்மா!’ என்று மீண்டும் வர்ணிக்க அத்தோடு முடிகிறது வீடியோ. 

வைரலாக பரவி தமிழக போலீஸின் மானத்தை வாங்கும் இந்த வீடியோவை எடுத்து வைத்து பேசும் விமர்சகர்கள் “ தமிழக போலீஸின் கெளரவம், மானம், தன்மானம், அதிகார மிடுக்கு, ஆணவம்  எல்லாம் டாஸ்மாக் பாரில் சிதறிக்கிடக்கும் தண்ணீரில் விழுந்து, குடிமகன்களின் அழுக்கேறிய போதை கால்களால் மிதிக்கப்படுவதற்கு சமம்தான் இந்த வீடியோ. இந்த வீடியோ சொல்வது படி பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லேடி போலீஸ் இவர் என்பதும், அவருடைய ‘காவலர் எண் 289’ என்பதும் அவர் அணிந்திருக்கும் பேட்ஜிலிருந்து தெரிகிறது. 

வீடியோவை எடுப்பவர் மிக புத்திசாலித்தனமாக அதில் தன் முகத்தை காட்டிக் கொள்ளவேயில்லை. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்தில் உட்கார்ந்து இந்த கூத்தடிக்கிறார்கள். அதன் படி பார்த்தால் அந்த வாகனம் அரசாங்கம் இவர்களுக்கு வழங்கியிருக்கும் ரோந்து வாகனமாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 

தான் போதையிலிருப்பதை அவர் வீடியோ எடுக்கிறார் என்பது தெரிந்தும் கூட கவலையில்லாமல், அந்த நபரை நம்பி ஏமாந்திருக்கிறார் பெண் போலீஸ். அவரது அந்தரங்க பாகங்கலை கவலையில்லாத கோணத்தில் படமெடுத்திருக்கிறது கேமெரா! வீடியோவாக்கப்படுகிறோம் என்பது தெரிந்துமே தொடர்ந்து டம்ப்ளரிலிருந்து சாராயத்தை குடிப்பதும், வாடா! போடா! என்று சக ஆணை பேசுவதும், அவரும் இவரை வாடீ, போடீ! என்பதும், போலீஸ் துறைக்குள் ஆண்-பெண் பரஸ்பர சிநேகித கலாச்சாரத்தின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்குகிறது. 

நெடுஞ்சாலைகளில் மக்களின் பயணம் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிப்படுத்த கொடுக்கப்பட்ட பேட்ரோல் வாகனத்தை பார் ஆக்கியிருக்கிறார்கள் என தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழக போலீஸ் ஆணவம் தலைக்கேறி தறிகெட்டு செயல்படுகிறது. அவர்களின் தலையில் சம்மட்டியால் அடித்துள்ளது இந்த வீடியோ. இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து மீசையை முறுக்கும் போலீஸ்?!

இந்த வீடியோ நிச்சயம் போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் போயிருக்கும். இந்த குடிகார போலீஸ் மீது அவர்கள் எடுத்த அல்லது எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ‘போலீஸ் போல் நடித்து வேண்டுமென்றே இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் உண்மை போலீஸ் இல்லை’ என்று சொல்லி கூட தப்பிக்கலாம். அப்படி அவர்கள் உண்மை போலீஸ் இல்லையென்றால், அவர்களை கைது செய்து, அவர்கள் யார், ஏன் இப்படி செய்தார்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவரையில் தமிழக போலீஸ் தனது மீசையை முறுக்காமல் மடக்கியே வைப்பது நல்லது.” என்று விமர்சித்து தள்ளுகிறார்கள். 
என்ன செய்யப்போறீங்க டியர் ஆபீஸர்ஸ்?!