Kuvam floating in the river baby Recovery in virukambakkam

கோயம்பேட்டில் கூவம் ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை உடலை மீட்ட போலீசார், அந்த குழந்தையை யார் இப்படி கூவம் ஆற்றில் வீசியது? பெற்றோர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு கூவம் ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று அதிகாலையில் கூவம் ஆற்றில் பச்சிளம் குழந்தை ஒன்று மிதந்தது வந்தது. இதனை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த பகுதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு காவலர்கள், கூவம் ஆற்றில் மிதந்த குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மிதந்து வந்த உடல் ஆண் குழந்தை என்பதும், தொப்புள் கொடியுடன் இருப்பது தெரிந்தது. குழந்தை பிறந்த உடனேயே அதை கூவம் ஆற்றில் வீசி விட்டுருப்பதாக என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த குழந்தையின் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டதால், குழந்தை இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை, குழந்தையின் பெற்றோர் யார்? என்று தெரிய வில்லை.

இந்தக்குழந்தை கள்ளக் காதல் தொடர்பால் பிறந்ததால் கூவம் ஆற்றில் வீசிப் பட்டதா? அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசப்பட்டதா? என்பது குறித்து கோயம்பேடு காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.