Kushboo press meet about beaf ban

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் பாஜகவினர் தோல் செருப்புகளை பயன்படுத்தாமல் இருப்பார்களா என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, பெல்ட்டுக்குப் பதில் அதில் அவர்கள் நாடா கயிறுகளை கட்டிக் கொள்ளட்டும் என தெரிவித்தார்.

மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை மத்திய அரசு தடைசெய்து உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, என்னுடைய தட்டில் என்ன இருக்க வேண்டும் ? என நான்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தான் சாப்பிட வேண்டும் ,. இதைத்தான் உடுக்க வேண்டும், இதைத்தான் படிக்க வேண்டும் என யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது என குஷ்பூ தெரிவித்தார்.

உலகிலேயே இந்தியாதான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது என்றும் அதுவும் பாஜக ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி இரு மடங்காக உயர்ந்துள்ளது என கூறினார்.

தாவரங்களுக்குக் கூட உயிர் இருக்கிறது.. அந்த உயிரை கொல்லக் கூடாது என பாஜகவினர் சாப்பிடாமல் இருப்பார்களா என குஷ்பூ கேள்வி எழுப்பினார்.

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் பாஜகவினர் தோல் பொருட்களை தடை செய்வார்களா? தோலால் உருவாக்கப்பட்ட செருப்பு அணியாமல் இருப்பார்களா ? பெல்ட் அணியாமல் நாடா கயிறுகளை கட்டிக் கொள்வார்களா ? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.