குரங்கணி தீ விபத்தில் நேற்று கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சை சாய் வசுமதி, சென்னை நித்யா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் சென்னை மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த 36 பேர் கடந்த 11-ந் தேதி மலையேற்ற பயிற்சிக்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட  பலர் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 50 சதவீத காயங்களுடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ  கோவை கங்க மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் 70 சதவீத தீக்காயங்களுடன்  சிகிச்சை பெற்று வந்த தஞ்சையைச் சேர்ந்த சாய் வசுமதி என்ற பெண் இன்று காலை பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

இதே போல் மதுரை தனியார் மருத்வமனையில் 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த சென்னையைச் சேர்ந்த நிதியா என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.