தமிழகம் மற்றும் கர்காடகாவில் தென் மேற்கு பருவமழை  தொடர்ந்து பெய்து வருவதால்,  மேட்டுர்  அணையின் நீர் மட்டம் 10 மாதங்களுக்குக்குப் பிறகு  50 அடியை எட்டியுள்ளது. கே.ஆர்.பி. அணையும் நிரம்பு வழிகிறது.

தமிழகம் மற்றும்  கர்நாடக  பகுதிகளில்  தென் மேற்கு பருவ மழை பெய்து வருவதால் , கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி. அணை நிரம்பி வழிகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்த  பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல், கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.  மேலும்  கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளிலும் கன  மழை கொட்டி வருகிறது.

இதன் காரணமாக   கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அந்த  அணைகளில் இருந்து 25000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்  அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

மேலும்  மேட்டூர் அணையின் நீர்மட்டம்  10 மாதங்களுக்குப் பிறகு  50 அடியைத் தொட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.