Asianet News TamilAsianet News Tamil

ஜெயின் பெண் துறவிகள் கார் மோதி பலி... நடந்து செல்வோருக்கு என்ன பாதுகாப்பு?

கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற ஜெயின் துறவிகள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Krishnakiri car accident
Author
Tamil Nadu, First Published Dec 16, 2018, 1:51 PM IST

கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற ஜெயின் துறவிகள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஜெயின் துறவிகள் என்பவர்கள் இந்தியாவில் எங்கு போனாலும் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் துறவிகள் 20-க்கும் மேற்பட்டோர் வேலூர் ஸ்ரீபுரம் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். இந்நிலையில் நேற்றிரவு கிருஷ்ணகிரி அரசு கல்லூரி அருகே பத்மாவதி கோவிலில் தங்கிவிட்டு, அதிகாலையில் நடைபயணத்தை மீண்டும் தொடங்கினர். Krishnakiri car accident

அப்போது ஒரப்பம் தேசிய நெடுஞ்சாலையில் துறவிகள் சென்றுக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார்  துறைவிகள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயின் துறவிகள் குழுவில் இருந்த  ஜிக்கர் மஜூரி மற்றும் பூஜா ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் கார் நிலைதடுமாறி இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ஜோசப் பிராங்ளின் அங்கிருந்து தப்பித்தார். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 2 பெண்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Krishnakiri car accident

பின்னர் தப்பியோடிய ஓட்டுநர் ஜோசப் பிராங்ளினை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு நடைபயணத்தின் போது  தேசியநெடுஞ்சாலையில் செல்வோருக்கு என்ன பாதுகாப்பு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios