கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணகிரி நகராட்சியில் 5 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய இரண்டு நகராட்சிகள் இருந்தன. கடந்த 2019 பிப்ரவரி மாதம் மாநிலத்தின் 13வது மாநகராட்சியாக ஒசூர் தரம் உயர்த்தப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி மட்டுமே தற்போது நகராட்சியாக உள்ளது. 33 வார்டுகள் இங்கு இருக்கிறது. 

கிருஷ்ணகிரியில் 2வது முறையாக சேர்மன் பதவியை கைப்பற்றும் நோக்கில் 1 மற்றும் 17 வது வார்டில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார் பரிதா நவாப். இவர் 2006 - 2011 வரை நகர்மன்றத் தலைவராக இருந்தவர். 2016 முதல் மாவட்ட மகளிரணி அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவரது கணவர் நவாப் 20 வருடமாக நகரச் செயலாளராக உள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன் தனது மகன் தமிழ்ச்செல்வனை கிருஷ்ணகிரியில் குடியமர்த்தி தனது மருமகளுக்கு சீட்டுக் கொடுத்து சேர்மனாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியுள்ளனர்.

ஆளுங்கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்ளும் வகையில் பிரபலமானவர்கள் மற்றும் வாக்கு வங்கி உள்ளவர்களை களமிறக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் நகர மன்ற தலைவரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே.ஆர். சி.தங்கமுத்து தனது மனைவி காயத்ரியை களமிறங்கியுள்ளார்.

ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு சேர்மன் வாய்ப்பளித்தால் நகர தலைவர் லலித் ஆண்டனியின் அம்மா மரியா அல்போன்சா மற்றும் மற்றொரு நகர் மன்றத் தலைவரான முபாரக் மனைவிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், பாஜக, தேமுதிக,மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் சுயேச்சைகள் என தேர்தல் களம் கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிருஷ்ணகிரி பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணகிரி நகராட்சியில் 5 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.