கிருஷ்ணகிரி

வரும் 25-ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணன், வட தமிழக பிரசாரத் தலைவர் விஜய்காந்த், வட தமிழக சட்ட ஆலோசகர் சதாசிவன், மாவட்டச் செயலாளர் தனபாலன், மாவட்ட மகளிரணித் தலைவி மாயா, பர்கூர் ஒன்றியத் தலைவர் திருப்பதி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஜெயவேலன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் இறுதியில் காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் காவேரி நன்றித் தெரிவித்தார்.