Asianet News TamilAsianet News Tamil

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு பெயர் மாற்றிய எடப்பாடி... உச்சக்கட்ட டென்ஷனில் திமுக!

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Koyambedu bus name change... Late Chief Minister MGR Named
Author
Chennai, First Published Oct 10, 2018, 12:05 PM IST

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஓராண்டு காலமாக தமிழக மாவட்ட தலைநகரங்களில் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. Koyambedu bus name change... Late Chief Minister MGR Named

 இதன் நிறைவு விழா கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று சென்னை, சைதாப்பேட்டை, ஒய்.எம்.சி.எ., மைதானத்தில் நடத்தப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறப்பு திட்டங்கள் குறித்து பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். இறுதியாக கோயம்பேட்டில் இருக்கும்பேருந்து நிலையத்துக்கு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார். Koyambedu bus name change... Late Chief Minister MGR Named

அந்த அறிவிப்பின்படி, கோயம்பேடு பேருந்து நிலையம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, போற்றக்கூடிய வகையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Koyambedu bus name change... Late Chief Minister MGR Named

கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக நடவடிக்கை எடுத்தவர் எம்.ஜி.ஆர். என்று சைதை துரைசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios