Asianet News TamilAsianet News Tamil

இடிந்து விழும் நிலையில் கொள்ளிடம் ஆற்று பாலம்... பொதுமக்கள் அச்சம்... போக்குவரத்துக்கு தடை!

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Kollidam old bridge damage...transportation Ban
Author
Trichy, First Published Aug 16, 2018, 12:51 PM IST

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Kollidam old bridge damage...transportation Ban

கர்நாடகவில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கர்நாடக அணைகளில் அதிக அளவில் மழை பெய்யும் காலங்களில் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து திருச்சி வழியாக முக்கொம்பு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் கடலுக்கும் செல்கிறது.

காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து உள்ள காலங்களில் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் காவிரியை விட கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பின்னர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பலவீனம் அடைந்ததால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதனையடுத்து பழைய கொள்ளிடம் பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் மேட்டூர் அணையில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. Kollidam old bridge damage...transportation Ban

இதனால் பழைய கொள்ளிடம் ஆற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. இதையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios