kodaikanal police arrest two women

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சிறார்களை பிச்சை எடுக்க வைத்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுற்றுலாப்பகுதியான கொடைக்கானலில் அநாதையாக உள்ள சிறார்களை பிச்சை எடுக்கும் தொழிலில் பெண்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் முக்கிய பகுதிகளில் பிச்சை எடுக்கும் நபர்களின் விவரங்களைௌ சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது சரஸ்வதி மற்றும் காயத்திரி ஆகிய இரண்டு பெண்கள், அநாதையாக இருக்கும் சிறார்களை மிரட்டி அவர்களை பிச்சையெடுக்கும் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. உரிய ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அவ்விருவரையும் கொடைக்கானல் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் 10 வயது சிறுமி, மற்றும் 12 வயது சிறுவனை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.