நாகப்பட்டினம்
 
நாகப்பட்டினத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்பு செய்த கொலையை ஒப்புக்கொண்டு கொலையாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். 

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், பிரதாபராமபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் ராஜா (40). கார் ஓட்டுநர். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி வேளாங்கண்ணி அருகில் கடுவை ஆற்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கைதான ஐந்து பேரையும் காவலாளர்கள், நாகப்பட்டினம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அவர்கள் அனைவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மணிகண்ட ராஜா உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கள்ள உறவை நிறுத்தாததால் கார் ஓட்டுநரை கொலை செய்துவிட்டு அதனை ஐந்து வருடங்கள் கழித்து ஒப்புக்கொண்டு சரணடைந்த கொலையாளிகளால் கிராம நிர்வாக அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.