Asianet News TamilAsianet News Tamil

மனைவியின் தோழியைச் கொன்று நகை கொள்ளை…. பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி எறிந்த கொடூரம்…. கொள்ளையடித்த  பணத்தில் மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடிய வாலிபர்!!

Killed wife fried and theft ornaments in soolaimedu
Killed wife fried and theft ornaments in soolaimedu
Author
First Published Apr 19, 2018, 9:22 AM IST


மனைவியின் தோழியைச் கொன்று நகை கொள்ளை…. பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி எறிந்த கொடூரம்…. கொள்ளையடித்த  பணத்தில் மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடிய வாலிபர்!!

சென்னை சூளைமேடு பகுதியில் நர்சைக் கொன்று நகையைக் கொள்ளையடித்த வாலிபர் அதை விற்று தனது மனையின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வடக்கு புதுப்பேட்டையைச் சேர்ந்த வேல்விழி, டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். 3 வாரங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
சூளைமேடு வீரபாண்டி நகர் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனது தோழிகள் 3 பேரோடு வேல்விழி தங்கினார். இவர் வீடுகளுக்கு சென்று நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் ‘ஹோம்நர்சு’ ஆக வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில் வேல்விழி திடீரென காணாமல் போனார். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வேல்விழியைக் காணவில்லை என சூளைமேடு போலீஸ் நிலையத்தில்  அவரின் தந்தை புகார் கொடுத்தார்.

சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வேல்விழி வசிக்கும் வீட்டிற்கு பக்கத்தில் அஜித்குமார் என்பவர் தனது மனைவி மகாலட்சுமியோடு வசித்து வந்தார். அஜித்குமாரின் மனைவி மகாலட்சுமி ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலைபார்த்தார். இதனால் வேல்விழியும், மகாலட்சுமியும் நெருங்கிய தோழிகள் என்பதால் அவர்களிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

வேல்விழியை தான் தான் கொலை செய்தேன் என்று  ஒப்புக்கொண்டார். வேல்விழி அணிந்திருந்த தங்ககம்மல்கள், ஒரு மோதிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்ததாக அஜித்குமார் தெரிவித்தார். வேல்விழியின் பிணத்தை பிளாஸ்டிக் சாக்கில் மூட்டையாக கட்டி கோயம்பேடு மார்க்கெட் அருகே, தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள காலி மைதானத்தில் மின்சார கேபிள் வயரை சுற்றிவைக்கும் இரும்பு ரோலருக்குள் மறைத்துவைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து  வேல்விழியின் பிணத்தை போலீசார் மீட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர்.

கடந்த 9 ஆம் தேதி தனது மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் சிறப்பாக கொண்டாட தீர்மானித்த அஜித், அவரிடம் பணம் இல்லாதால் மனைவியின் தோழி வேல்விழியிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு அஜித்தை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரடைந்த  அஜித், வேல்விழி வீட்டில் தனியாக இருந்தபோது  அவரது சுடிதார் துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு, பிணத்தை மூட்டையில் கட்டி கோயம்பேடு பகுதியில் வீசி எறிந்துவிட்டு வந்ததுவிட்டார்.

வேல்விழியிடம் கொள்ளையடித்த தங்ககம்மல்கள், மோதிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை விற்று அந்த பணத்தின் மூலம் ஒரு வெள்ளிக்கொலுசு வாங்கி தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்து, விழாவையும் மகிழ்ச்சியோடு கொண்டாடியதாக அஜித்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios