Asianet News TamilAsianet News Tamil

விளம்பர நிறுவனத்திடம் ரூ.1.75 கோடி மோசடி... பிரபல நகைக்கடை உரிமையாளர் அதிரடி கைது!

விளம்பர நிறுவனத்திடம் ரூ.1.75 கோடி மோசடி செய்தது தொடர்பாக கேரளா ஃபேஷன் ஜூவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான சுனில் செரியன் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Kerala Fashion Jewelery Owner Arrest
Author
Chennai, First Published Sep 18, 2018, 1:10 PM IST

விளம்பர நிறுவனத்திடம் ரூ.1.75 கோடி மோசடி செய்தது தொடர்பாக கேரளா ஃபேஷன் ஜூவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான சுனில் செரியன் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். Kerala Fashion Jewelery Owner Arrest

சென்னையில் மயிலாப்பூர் புரசைவாக்கம், வளசரவாக்கம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் கேரளா ஃபேஷன் ஜூவல்லரி செயல்படுகிறது. இந்த நகைக்கடை குறித்து நாளிதழ்கள், டிவிகளில் ஏராளமான விளம்பரங்கள் வந்தன. இதற்காக ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தை அணுகியுள்ளனர். பேப்பர் மற்றும் டிவிக்களில் தொடர்ந்து விளம்பரம் கொடுக்கப்பட்டால், தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான 50 நாட்களிலோ அல்லது இதழ்களில் பிரசுரமான 50 நாட்களிலோ அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். 

இந்நிலையில் கேரளா ஃபேஷன் ஜூவல்லரி, தனியார் விளம்பர நிறுவனத்துக்கு ரூ.175 கோடி தர வேண்டி இருந்தது. இதற்காக நகைக்கடை உரிமையாளர் காசோலை கொடுத்தார். ஆனால், வங்கியில் பணம் இல்லை என திரும்பிவிட்டது.  இதுகுறித்து கேட்டபோது, பணத்தை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணத்தை தரமுடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. Kerala Fashion Jewelery Owner Arrest

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேரளா ஃபேஷன் ஜூவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான சுனில் செரியனை கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios