காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் அதிரடி கைது ...! வீடு வாங்க பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனை..?
பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளார் .
சென்னை, பெங்களூர், கோயம்பத்தூர் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களில் கட்டுமான தொழிலில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது .
இந்த நிறுவனத்தை பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கட்டுமானத்தில் சிறந்து விளங்குவதிலும், புது புது மாடல்களில் வீடுகளை கட்டி தருவதிலும் புகழ் பெற்றது இந்த நிறுவனம் .
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் தங்கள் கட்டுமான தொழிலை தொடங்கியுள்ள, காசா கிராண்டே நிறுவனம், சென்னையில் பல இடங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக நிர்வாக இயக்குனர் அனிருதன் உள்பட மேலும் இருவரை மத்திய குற்றபிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .
இதனால், இந்த நிறுவனத்தில் வீடு வாங்க முன்பதிவு செய்துள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .