இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் இடங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை, சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும் ஆட்சியர்கள் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கையின் எதிரொலியாக தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள சீமை கருவேல மரங்களை யார் வேண்டுமானாலும் அகற்றலாம் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.

ஆனால், சில நிபந்தனைகளையும் நிர்வாகம் போட்டுள்ளது.

அதாவது, “சீமை கருவேல மரங்களை துாருடன் அகற்ற வேண்டும்”

“சிறிய மரங்களையும் அகற்ற வேண்டும்.”

“முடிந்தால் குறைந்தபட்ச தொகை செலுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது”.

முக்கியமாக சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றாவிடில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என்ற உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறப்படும்” என்பதே அந்த நிபந்தனைகள்.