கரூர் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக... அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்தித்துள்ளது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 42, அதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1, இந்திய தேசிய காங்கிரஸ் 1, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதன் முழு விவரத்தை காண்போம்.
திமுக வேட்பாளர்கள் வெற்றி:
1 ஆவது வார்டில் ம.சரவணன், 2 ஆவது வார்டில் க.வடிவேல் அரசு, 3 ஆவது வார்டில் சக்திவேல், 4 ஆவது வார்டில் வெ.கவிதா, 5 ஆவது வார்டில் எம்.பாண்டியன், 6 ஆவது வார்டில் செ.மாரியம்மாள், 7 ஆவது வார்டில் அ.பூங்கோதை, 8 ஆவது வார்டில் வ.ராஜேஸ்வரி, 10 ஆவது வார்டில் ந.ரஞ்சித்குமார், 13 ஆவது வார்டில் செ.சரண்யா, 15 ஆவது வார்டில் ஆ.தியாகராஜன், 17 ஆவது வார்டில் கே.சக்திவேல், 18 ஆவது வார்டில் எம்.தங்கராஜ், 19 ஆவது வார்டில் கே.அருள்மணி, 20 ஆவது வார்டில் ஏ.லாரன்ஸ், 21 ஆவது வார்டில் வெ.நந்தினி, 22 ஆவது வார்டில் ச.பிரேமா, 23 ஆவது வார்டில் எஸ்.வளர்மதி, 24 ஆவது வார்டில் கா.அன்பரசன், 25 ஆவது வார்டில் ச.நிர்மலாதேவி , 26 ஆவது வார்டில் மா.ரமேஷ், 27 ஆவது வார்டில் ர.தேவி, 28 ஆவது வார்டில் ம.சுகந்தினி, 29 ஆவது வார்டில் ர.புவனேஸ்வரி, 30 ஆவது வார்டில் சி.யசோதா, 31 ஆவது வார்டில் பா.சாந்தி, 32 ஆவது வார்டில் வி.நிவேதா, 33 ஆவது வார்டில் எ.பாலவித்யா, 34 ஆவது வார்டில் ரா.தெய்வானை, 35 ஆவது வார்டில் இந்திராணி, 36 ஆவது வார்டில் பி.வசுமதி, 37 ஆவது வார்டில் எஸ்.பி.கனகராஜ், 38 ஆவது வார்டில் ஆர்.எஸ்.ராஜா, 39 ஆவது வார்டில் பா.சூரியகலா, 40 ஆவது வார்டில் க.சரஸ்வதி, 42 ஆவது வார்டில் செ.கார்த்திக்குமார், 43 ஆவது வார்டில் அ.கயல்விழி, 44 ஆவது வார்டில் சு.மோகன்ராஜ், 45 ஆவது வார்டில் ம.ராஜேந்திரன், 46 ஆவது வார்டில் ப.சரவணன், 47 ஆவது வார்டில் பொ.பழனிச்சாமி, 48 ஆவது வார்டில் ரா.வேலுசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி:
11 ஆவது வார்டில் சி.தினேஷ்குமார், 14 ஆவது வார்டில் பி.சுரேஷ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் வெற்றி:
41வது வார்டில் ம.தண்டபாணி வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி:
9வது வார்டில் ரா.ஸ்டீபன் பாபு வெற்றி பெற்றுள்ளார்
சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி:
12வது வார்டில் மஞ்சுளா பெரியசாமி, 16வது வார்டில் பா.பூபதி ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
