Karur arrested in thieves
கரூர்
கரூரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டார்.
கரூர் மாவட்டம், இலாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சங்கர் (28). இவர் மீது லாலாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்றங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து திருடுதல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் சங்கர் மீதுள்ளன.
இதையடுத்து சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து காவலில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜூக்கு பரிந்துரைத்தார்.
அதனையேற்ற ஆட்சியர் அளித்த உத்தரவின்படி சங்கர் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைப்படியும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படியும் அனைவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
