karunas sisters daughter is death for dengue

தமிழகத்தில் டெங்குவுக்கு பலர் பலியாகி வரும் நிலையில் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவான கருணாஸின் தங்கை மகள் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. 

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் டெங்குவுக்கு பலர் பலியாகி வரும் நிலையில் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவான கருணாஸின் தங்கை மகள் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், ராமநாதபுரத்துக்கு துக்க காரியத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும், மருத்துவமனைகளில் 100 பேர் அனுமதிக்கப்படும் இடத்தில் 1000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். 

மேலும், அந்த 1000 பேருக்கான மருந்துகளும் மருத்துவர்களும் போதிய அளவு இல்லை எனவும் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.