திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. 

வயது முதிர்வு காரணமாக கிருணாநிதி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலமானார். கருணாநிதியின் மறைவை அடுத்து, அவரது முழு உருவ வெண்கலச் சிலை, அண்ணா அறிவாலயத்தில் அமைக்க திமுக திட்டமிட்டது. இதற்காக கருணாநிதி சிலையை வடிவமைக்கும் பணியை சிற்பி தீனதயாளனிடம் கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கருணாநிதி சிரித்த முகத்துடன் ஒரு கையை உயர்த்தி கையசைக்கும் விதமாக இந்த சிலை வடிவமைக்கப்பட உள்ளது. சிற்பி தீனதயாளன் வடிவமைக்கும் கருணாநிதியின் சிலையை மு.க.ஸ்டாலின் அண்மையில் பார்வையிட்டார். அப்போது சில மாறுதல்களை செய்யும்படியும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

கருணாநிதியின் சிலை வடிவமைக்கும் பூர்த்தியாகும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிலை வைப்பதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. சிலை நிறுவுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடைபெறத் துவங்கியுள்ளன.