திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், அவரது உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று இரவு கருணாநிதி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானதால். தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. காவேரி மருத்துமனை முழுவதும் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பிறகு நேற்று காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்றும், சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொண்டர்கள் மத்தியில் சற்று பதற்றம் தணிந்தது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை முதலே அவரது குடும்பத்தினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் காலை 11 மணிக்கு மேல் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.